×

டி.டி.வி தினகரனின் சம்பந்தியாகிறார் காங்கிரஸ் கட்சி பிரமுகர்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளின் நிச்சயதார்த்தை எளிமையாக நடத்தியிருக்கிறார்கள். மாப்பிள்ளையின் அப்பா காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கிருஷ்ணசாமி வாண்டையார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன். பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் நின்று வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகி இருக்கிறார். அதிமுகவோடு பிணக்கு என்பதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளின் நிச்சயதார்த்தை எளிமையாக நடத்தியிருக்கிறார்கள். மாப்பிள்ளையின் அப்பா காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கிருஷ்ணசாமி வாண்டையார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவரின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன். பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் வென்ற ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் நின்று வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகி இருக்கிறார். அதிமுகவோடு பிணக்கு என்பதால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி அதற்குப் பொதுச்செயலாளராக இருப்பவர்.

டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசிக்கும் இன்று (ஜூலை 25) பாண்டிச்சேரி, கிழக்குக் கடற்கரை சலையில் உள்ள பண்ணை வீட்டில் மிக எளிமையாக நிச்சயார்த்தம் நடந்திருக்கிறது. மிக நெருக்கமான குடும்ப உறவுகள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

மணமகன் ராமநாத துளசி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இவரின் அப்பா, கிருஷ்ணசாமி காங்கிரஸ் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இவரின் அப்பா (மணமகனின் தாத்தா) துளசி வாண்டையார் 1991-96 காலக்கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

ஜெயஹரிணியைப் பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டிலிருந்துதான் முதலில் தகவல் வந்தது என்றும், அதை சிறையிலிருக்கும் சசிகலாவிடம் தெரிவித்தபோது அவர் சம்மதம் கொடுத்தப் பிறகே இந்த நிச்சயதார்த்தம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், சசிகலாவின் தலைமையில் வரும் ஜனவரி மாதம் ஜெயஹரிணி – ராமநாதன் துளசி திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.