×

கெஞ்சிய இபிஎஸ்! கைவிரித்த அமித்ஷா

 

திருவண்ணாமலை பயணத்திற்காக நேற்று முன் தினம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
             
தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை சந்திக்க தூது அனுப்பிய நிலையில் ஒரு வழியாக அவருக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது வேலுமணி மற்றும் சண்முகம் ஆகியோர் கட்சியை கைப்பற்ற இணைப்பதாகவும் எனக்கு தங்களது ஆதரவு வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்தாராம். ஆனால் அவரோ  இது அதிமுகவின் உள்கட்சி விவகாரம்.  என்பதால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் தலையிட விரும்பவில்லை. எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறி கை விரித்து விட்டாராம். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அப்செட ஆகியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பில் இருவரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 15 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு அமித்ஷா அறிவுறுத்தினார். தவெக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்கவும் அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.