×

அதிமுக தொண்டர்களை சுறுசுறுப்பாக்கிய எடப்பாடி பழனிசாமியின் பிரசார வியூகம்!

தமிழக சட்ட மன்ற தேர்தல் வர இன்னும் ஐந்து மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் மக்களை தேடி சென்று சந்திக்கும் சூழல் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. தேர்தல் அறிக்கை பணிகள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் அதிகாரபூர்வமாக துவங்காத நிலையில் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி எடப்பாடியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இதையடுத்து அவசர அவசரமாக களம்
 

தமிழக சட்ட மன்ற தேர்தல் வர இன்னும் ஐந்து மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் மக்களை தேடி சென்று சந்திக்கும் சூழல் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. தேர்தல் அறிக்கை பணிகள் மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் அதிகாரபூர்வமாக துவங்காத நிலையில் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி எடப்பாடியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதையடுத்து அவசர அவசரமாக களம் இறங்கிய தி.மு.க “கிராம சபை” என்ற பெயரில் தனது பிரச்சாரத்தை தொடங்கியது. ஒரே இடத்தில் மக்களை கூட்டி அவர்களிடம் உரை நிகழ்த்தும் வகையில் தி.மு.கவின் பிரச்சரம் அமைந்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் என்பது மக்களை களத்தில் சந்தித்து நேரடியாக வீட்டிற்கு வீடு செல்லும் பிரச்சாரமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடத்தில் நேரடியாக முதலமைச்சர் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்திக்கும் வகையில் முதலமைச்சரின் பிரசாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தனது பிரசார பயணத்தின்போது, அ.தி.மு.க அரசின் பத்து ஆண்டு சாதனைகள் மற்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதிலிருந்து செய்துள்ள சாதனைகள் குறித்தும் மக்களிடத்தில் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க உள்ளார். எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் வகையில் இல்லாமல், தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் தனது பிரசாரத்தில் மக்களிடம் எடுத்துரைக்க உள்ளார். கொங்கு மண்டலத்தில் தனது பிரசார சுற்று பயணத்தை துவக்கவுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகள் தென் தமிழகம் மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

முதலமைச்சரின் பேச்சாற்றல் என்பது அவருக்கு பலமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதும் நிலையில், சாதாரண மக்களிடமும் எளிதில் பழகக்கூடிய முதலமைச்சரின் குணம் தமிழக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால், தேர்தல் பிரசார சுற்று பயணத்தின்போது முதலமைச்சர் தங்கள் பகுதிகளுக்கும் வருவார் என்று அ.தி.மு.க தொண்டர்களிடம் மட்டும் அல்லாது பொது மக்களிடமும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கொரோனோவையும் வென்று ஊரடங்கு கால கட்டத்திலும் பெரும் முதலீடுகளையும் ஈர்த்து தனது சாதனை பட்டியலை நீள செய்திருக்கும் முதல்வர் இந்த பிரசாரத்தின்போது, அரசியல் பேசாமல், ஆட்சி மற்றும் வளர்ச்சி குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார். தேர்தல் பிரசாரத்தின் போது, அரசியல் கட்சிகள் மற்றவர்கள் மீது குற்ற சாட்டுக்களை கூறி வாக்கு சேகரிப்பது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் தமிழகத்திற்கு செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்கும் வகையில் தனது தேர்தல் பிரசாரத்தை வடிவமைத்துள்ளார்.

2017ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றபோது, அரசியல் சரளமாக தெரியாத மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி யார் என்றே தெரியாது. அரசு இப்போது கவிழ்ந்துவிடும், அப்போது மூழ்கிவிடும் என எதிர்க்கட்சிகளும் சில அரசியல் நோக்கர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், நடைபெறும் ஆட்சி காலத்தை வெற்றிகராமாக கடந்து அடுத்த தேர்தலுக்கும் அ.இ.அ.தி.மு.கவையும் கட்சி தொண்டர்களையும் ஒரு சேர எடப்பாடி பழனிசாமி தயார்படுத்தி வருவது அவரை குறைத்து எடை போட்டவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு நிலையில்லா தன்மை ஏற்பட்டது. எந்த ஒரு மாநிலத்திலும் இந்நிலை ஏற்படும் பட்சத்தில் நிலையில்லா தன்மை என்பது தவிர்க்க முடியாத ஒன்று, ஆனால், இத்தனை சவால்களுக்கும் இடையே தமிழகத்தின் முன்னணி தலைவர்கள் பட்டியலில் முதன்மையான இடத்தை பிடித்து தமிழகத்தில் இருந்ததாக கூறப்படும் வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பியுள்ளார் என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க தொண்டர்களுக்கே அக்கட்சியின் எதிர்காலம் தொடர்பாக பெரும் அச்சம் இருந்த நிலையில் தனது ஆட்சி மூலம் தனி ஒரு மனிதராக அந்த அச்சத்தை போக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எனவே அவரது பிரச்சாரம் அதிமுகவுக்கு வெற்றியை கொண்டுவரும் என்கிற நம்பிக்கை உள்ளது என தெரிவிக்கின்றனர் அதிமுகவினர்.