×

பாஜக எல்.முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பிரதமர் மோடிதலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்முருகன்
 

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பிரதமர் மோடி
தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்முருகன் தலைமையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. போட்டியிட்ட 20 இடங்களில் 4 இடங்களை கைப்பற்றி 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்திற்குள் நுழைந்தது பாஜக. தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் பல ஆண்டுகால கனவு எல்.முருகன் தலைமையில் நிறைவேறியிருப்பதால் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டார்.

விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் தகவல் & ஒலிபரப்புத்துறை ஆகிய துறைகளில் இணையமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அதன் படி, நேற்று மாலை டெல்லியில் எல்.முருகன் பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய இணையமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு பல தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.