×

முன்னாள் அமைச்சர்களை சிறைக்கு அனுப்ப துடிக்கும் ஸ்டாலின்…உதயநிதிக்காக நடத்தும் அரசியல்!!

தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளது உதயநிதியின் எதிர்காலத்திற்காக தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய சிவகங்கை ,திருப்பத்தூர் ,அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் மருது அழகுராஜ் ,வைகைச்செல்வன் ,செந்தில்நாதன் உள்ளிட்டோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது பேசிய அவர், “திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி .அதிமுகவில் இருந்த சென்றவர்களுக்கு உடனே அங்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படுகிறது.திமுகவின் பொய் பேச்சினால்தான் அவர்கள் 10 ஆண்டுகளாக வனவாசத்தில் உள்ளனர்.எடப்பாடி
 

தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளது உதயநிதியின் எதிர்காலத்திற்காக தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய சிவகங்கை ,திருப்பத்தூர் ,அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் மருது அழகுராஜ் ,வைகைச்செல்வன் ,செந்தில்நாதன் உள்ளிட்டோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் .அப்போது பேசிய அவர், “திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி .அதிமுகவில் இருந்த சென்றவர்களுக்கு உடனே அங்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படுகிறது.திமுகவின் பொய் பேச்சினால்தான் அவர்கள் 10 ஆண்டுகளாக வனவாசத்தில் உள்ளனர்.எடப்பாடி பழனிசாமி யார் என்று எனக்கு தெரியாது என்று கூறிவந்த ஸ்டாலினால் தற்போது எனது பெயரை சொல்லாமல் அரசியலை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்றார்.

“ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். ஸ்டாலின் மிரட்டுவது அதிமுக அமைச்சர்களை அல்ல. திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதிமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க்கப்படும் என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுகவில் உதயநிதியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 13 அமைச்சர்களை ஓரம்கட்ட தான் ஸ்டாலின் தனி நீதிமன்றம் அமைப்பதாகக் கூறி உள்ளார் ” என்றார்.