×

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனே திமுக அரசு செயல்படுகிறது – எடப்பாடி குற்றச்சாட்டு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக திறக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கப்படுவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட செயல் என அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். காழ்ப்புணர்ச்சி யுடன் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு செயல்பட்டால் அம்மா உணவகம்
 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக திறக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கப்படுவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இது திட்டமிடப்பட்ட செயல் என அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். காழ்ப்புணர்ச்சி யுடன் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு செயல்பட்டால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டிருக்காது என்று விளக்கம் அளித்தார்.

எனினும், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் என்றார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.