×

“ஜோலார்பேட்டையில் ஸ்டாலின்; கொளத்தூரில் மனைவி துர்கா” அனல் பறக்கும் அரசியல் களம்!!

கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்ட மன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் பிரதான கட்சிகள் இரண்டும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தல் போட்டியில் களம் காண்கின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து
 

கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்ட மன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் பிரதான கட்சிகள் இரண்டும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தல் போட்டியில் களம் காண்கின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மு.க. ஸ்டாலின் ஒருபுறம் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில் அதிமுக, பாஜக ,பாமக ஆகிய கட்சிகள் பழனிசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இரு பெரும் கட்சிகளும் தங்கள் பரப்புரையில் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் திராவிட கழகங்களை விமர்சிக்க மறப்பதில்லை.

இந்த சூழலில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் .அப்போது பேசிய அவர் விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் சிஐஏ அமல்படுத்த படாது என்ற கருத்துகளை முன்னிறுத்தி பேசினார்.இந்நிலையில் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக துர்கா ஸ்டாலின் திருநங்கைகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து அவர் அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் திருநங்கைகளுக்கு அளிக்கப்படவுள்ள சலுகைகள் என்னென்ன என்பது குறித்தும் தெரிவித்தார்.