×

“இந்த சிறிய விஷயத்தை கூட திமுக சொல்லித் தான் அரசு செய்கிறது” – துரைமுருகன் விமர்சனம்!

மருத்துவ கல்விக் கட்டணம் விவகாரத்தில் திமுகவின் வழியை தமிழக அரசு பின்பற்றுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், அவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து
 

மருத்துவ கல்விக் கட்டணம் விவகாரத்தில் திமுகவின் வழியை தமிழக அரசு பின்பற்றுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்துள்ள 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், அவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மருத்துவக் கல்வி கட்டணத்தில் கூட திமுக அறிவித்த பிறகுதான் அதிமுக அரசுக்கு அந்த யோசனை வந்துள்ளது. இந்த சிறிய விஷயத்தை கூட திமுக அறிவித்த பிறகுதான் அதிமுக அரசு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் வழியில்தான் அதிமுக அரசு நடக்கிறதா? என விமர்சித்தார்.

இது குறித்து பேசிய பொன்முடி, மாணவர்களின் மருத்துவ கல்வி செலவை முதலிலேயே முதல்வர் அறிவிக்காதது ஏன்? முதல்வர் தற்போது அறிவித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தமே காரணம். அதிமுக அரசு அனைத்தையும் தாமதப்படுத்தி செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.