×

காங்கிரஸ் வேட்பாளர் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்!

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார். கடந்த 20 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதவராவ் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரின் தேர்தல் பரப்புரை பணிகள் தேக்கம் அடைந்த நிலையில் அவரின் மகள் திவ்யா மாதவராவ்க்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் முடிந்த பிறகும், மருத்துவமனையில் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த
 

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார். கடந்த 20 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதவராவ் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரின் தேர்தல் பரப்புரை பணிகள் தேக்கம் அடைந்த நிலையில் அவரின் மகள் திவ்யா மாதவராவ்க்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் முடிந்த பிறகும், மருத்துவமனையில் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த மாதவராவ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக வேட்பளார் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா தொற்றுக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் திரு.மாதவராவ் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதோடு தடுப்பூசி போடுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகியவற்றை கடைப்பிடித்து கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு தமிழகமக்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் தனது மற்றொரு பதிவில், “கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.அண்ணாமலை அவர்கள் விரைவில் பூரண குணமடைய விழைகிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.