×

திமுகவில் அதிரடி மாற்றம்- சேகர்பாபு, அன்பில் மகேஸ்க்கு அதிகாரம் குறைப்பு!

 

திமுகவில் உட்கட்சி நிர்வாக வசதிக்காக 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


திமுகவில் உட்கட்சி நிர்வாக வசதிக்காக 110 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் இதற்கு முன்பு இருந்த 6 திமுக உட்கட்சி மாவட்டங்கள், தற்போது 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு மூன்று தொகுதிகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம், திரு வி க நகர் (தனி ), வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. திமுக கட்டமைப்பில் அடுத்த அதிரடி மாற்றமாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகள் மட்டுமே அன்பில் மகேஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பில் மாற்றம் செய்யும் முன்பாக அவர் வசம் 3 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய மூன்று தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.