×

‘திமுகவின் பரப்புரை பயணம் தொடரும்’ – உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம்!

தடையை கடந்து பரப்புரை தொடரும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் காலை தொடங்கியது. அதில் 27 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களாட்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல்
 

தடையை கடந்து பரப்புரை தொடரும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் காலை தொடங்கியது. அதில் 27 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களாட்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு. உதயநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்து நீண்ட நேரம் காவல் துறை கட்டுப்பாட்டில் வைப்பது கண்டனத்திற்குரியது.

கொரோனா ஆய்வு என்ற போர்வையில் மாவட்டந்தோறும் முதல்வர் அரசு விழாக்களை அரசியல் கூட்டமாக நடத்துகிறார். அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாற்றியுள்ள அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. திமுகவின் பரப்புரையை தடுக்க நினைத்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அந்த தீர்மானத்தை குறிப்பிட்டு கூறியுள்ளார்.