×

இடைத்தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும்  திமுக தனித்து போட்டி- ஸ்டாலின் அதிரடி

 

வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் திமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கலாம் என கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் விலகலும் திமுகக்கு அரசியல் சவாலாக அமைந்தது. இதனால் கூட்டணி அரசியலை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய கருத்து இந்த விவாதத்தை தீவிரப்படுத்தியது. “இனி கூட்டணி தேவையில்லை; திமுக தனித்து போட்டியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்ற அவரது கருத்து கட்சிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “, தற்போதைய சூழலில் கூட்டணி தேவையில்லை என்ற கருத்தும் முன்வருகிறது; அதை விரைவில் பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள் திமுகவின் எதிர்கால அரசியல் திசை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் திமுக அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது.