×

ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் – மு.க.ஸ்டாலின்

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கட்டணத்திற்கு அரசின் உதவி எதிர்பார்த்த நிலையில் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது திமுக. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும்
 

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கட்டணத்திற்கு அரசின் உதவி எதிர்பார்த்த நிலையில் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது திமுக.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைதி திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.ஏழை மாணவர்களின் துயரை துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை நினைவூட்டுகிறோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.