×

சீனியர்களிடம் இருந்து பதவியை பறிக்கும் திமுக- சேகர்பாபுவை எதிர்த்தவருக்கு பொறுப்பு வழங்க திட்டம்

 

சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்த பரந்தாமனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது.


திமுக செயற்குழு குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. இதில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளர்கள் கிடையாது என தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் பிரிப்பது குறித்து கட்சியின் மறு சீரமைப்பு குறித்தும் தீவிர ஆலோசனை செய்து இருக்கிறார்கள். கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் நியமனம் வரை செயற்குழு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி விடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். முதலில் பொறுப்பாளரை அறிவித்து விடலாம் அதன் பின்பு கழக தேர்தலை நடத்தி  பொறுப்பிற்கும் ஆட்களை தேர்வு செய்யலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

10 பாகங்களுக்கு ஒரு கிளைச் செயலாளர் எனவும் 40 ஆயிரம் பேருக்கு ஒரு வட்டச் செயலாளர் எனவும், ஒரு தொகுதிக்கு மூன்று பகுதி செயலாளர் எனவும் இரண்டு சட்டமன்றத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் எனவும் பிரித்திருக்கிறார்களாம்.  100 முதல் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இதில் சென்னை மாவட்டத்தில்  புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமித்திருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்த பரந்தாமனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது. மா சுப்பிரமணியன் எதிர்த்து அரசியல் செய்த  கேகே நகர் தனசேகருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது. அண்ணா நகர் எம் கே மோகன் அவர்களின் மகன் கார்த்திக் அவருக்கு மாவட்ட செயலாளர் கொடுக்கப்பட இருக்கிறது. சோழிங்கநல்லூர் முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட இருக்கிறது.