×

ஆ.ராசா மனைவி உடல்நிலை கவலைக்கிடம் : அதிர்ச்சியில் திமுகவினர்!

திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ரெலா மருத்துவமனை தெரிவித்துள்ளது. திமுக மக்களவை எம்.பி. ஆ. ராசா. இவர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 மாதமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமாகியுள்ளது. பரமேஸ்வரிக்கு அளித்துவந்த
 

திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ரெலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திமுக மக்களவை எம்.பி. ஆ. ராசா. இவர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 மாதமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமாகியுள்ளது.

பரமேஸ்வரிக்கு அளித்துவந்த கீமோதெரபி அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனால் அவருக்கு நோய் தொற்று தீவிரமானது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மனைவியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆ.ராசா அவருடன் தங்கி அவரை கவனித்து வந்த நிலையில் பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் அவரின் உடல்நிலையை கவனித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்துள்ளார். பரமேஸ்வரியின் நிலை திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.