×

‘இதை செய்தால் மோடியை ஸ்டாலின் நிச்சயம் வரவேற்பார்’ – திமுக எம்.பி ஆ.ராசா

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் என பல்வேறு திசையில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று பிரதமர் மோடியின் வருகை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அரசு விழாவில் பங்கேற்கவே அவர் சென்னை வந்ததாக கூறப்பட்டாலும், சென்னையில் இருந்து கிளம்பும் போது முதல்வர் பழனிசாமியுடன் அவர் தனியாக சந்தித்து
 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் என பல்வேறு திசையில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், நேற்று பிரதமர் மோடியின் வருகை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அரசு விழாவில் பங்கேற்கவே அவர் சென்னை வந்ததாக கூறப்பட்டாலும், சென்னையில் இருந்து கிளம்பும் போது முதல்வர் பழனிசாமியுடன் அவர் தனியாக சந்தித்து பேசியது தான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. அதற்காக தான் இந்த அரசு விழா நாடகம் எல்லாம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்தால் பிரதமர் மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பார் என திமுக எம்.பி ஆ.ராசா விமர்சித்திருக்கிறார். மேலும், திமுக ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்த போது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது அதிமுக என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.