×

வெளியானது திமுக அமைச்சர்கள் பட்டியல்… சுகாதாரத் துறை அமைச்சர் யார்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக அமைச்சரவை பட்டியல் வெளியானது. குறிப்பாக கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில் சுகாதாரத் துறை அமைச்சராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. திமுக அமைச்சர்கள் யார் யார் என்று கீழே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். முதலமைச்சர் ஸ்டாலின் – பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன் துரைமுருகன் – நீர்வளத்
 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக அமைச்சரவை பட்டியல் வெளியானது. குறிப்பாக கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில் சுகாதாரத் துறை அமைச்சராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. திமுக அமைச்சர்கள் யார் யார் என்று கீழே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் – பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்

துரைமுருகன் – நீர்வளத் துறை

கேஎன் நேரு – நகர்ப்புற வளர்ச்சித் துறை

ஐ.பெரியசாமி – கூட்டுறவுத் துறை

பொன்முடி – உயர்க்கல்வித் துறை

எவ வேலு – பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை

எம்ஆர்கே பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை

கேகேஎஸ்எஸ்ஆர் – வருவாய்த் துறை

தங்கம் தென்னரசு – தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை

ரகுபதி – சட்டத்துறை

முத்துசாமி – வீட்டு வசதித் துறை

பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை

தா.மோ. அன்பரசன் – ஊரக தொழில் துறை

மு.பெ.சாமிநாதன் – செய்தித் துறை

கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

அனிதா ராதாகிருஷ்ணன் – மீனவளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு

ராஜ கண்ணப்பன் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

சக்கரபாணி – உணவுத்துறை

கா. ராமச்சந்திரன் – வனத்துறை

செந்தில்பாலாஜி – மின்சாரத் துறை

ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மா.சுப்பிரமணியன் – சுகாதாரத் துறை

பி.மூர்த்தி – வணிகவரித் துறை

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

சேகர்பாபு – இந்து அறநிலையத் துறை

பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை

சா.மு.நாசர் – பால்வளத் துறை

மஸ்தான் – சிறுபான்மையினர் நலத் துறை

அன்பில் மகேஷ் – பள்ளிக்கல்வித் துறை

மெய்யநாதன் – சுற்றுச்சூழல் துறை

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலத் துறை

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை

மதிவேந்தன் – சுற்றுலாத் துறை

கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத் துறை