×

முதல்வர் எடப்பாடிக்கு திமுக உறுப்பினர் அட்டை – திமுக இணையதள காமெடி!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.முவில் “எல்லோரும் நம்முடன்.”. “வாருங்கள் திமுகவில் இணையலாம்” என்ற இணைய தள அமைப்பு, அரசியல் ரீதியாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணைய தளம் தொடங்கிய 3 நாட்களில் ஒரு லட்சம் பேர் சேர்ந்ததாக சொல்லப்பட்டது. இந்த இணைய தளத்தின் மூலம் இணைவதற்கு கைபேசி எண் இருந்தால் போதும். அதில் வரும் ‘ஓடிபி’ நம்பர் மூலம் விவரங்களைப் பெற்று திமுகவில் இணந்ததற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கி வருகிறார்கள். இந்த இணைய தளம் மூலம் பல காமெடி
 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.முவில் “எல்லோரும் நம்முடன்.”. “வாருங்கள் திமுகவில் இணையலாம்” என்ற இணைய தள அமைப்பு, அரசியல் ரீதியாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இணைய தளம் தொடங்கிய 3 நாட்களில் ஒரு லட்சம் பேர் சேர்ந்ததாக சொல்லப்பட்டது.

இந்த இணைய தளத்தின் மூலம் இணைவதற்கு கைபேசி எண் இருந்தால் போதும். அதில் வரும் ‘ஓடிபி’ நம்பர் மூலம் விவரங்களைப் பெற்று திமுகவில் இணந்ததற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கி வருகிறார்கள்.

இந்த இணைய தளம் மூலம் பல காமெடி காட்சிகளும் அறங்கேறி வருகின்றன. திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட மு.க அழகிரியின் பெயரில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது பெரிதாக பேசப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்க அதிபரான ‘ டொனால்ட் டிரம்ப்’ பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. கடந்த 19-09-2020 ல் அவர் திமுகவில் சேர்ந்ததாகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் திமுகவில் சேர்ந்த மறு நாள் அதாவது கடந்த 20-09-2020ல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவில் இணைந்ததாக உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளனர். அவரது தந்தை பெயர் கருப்பசாமி எனவும் 66 வயதான அவர் சேலம் எடப்பாடியைச் சேர்ந்தவர் எனவும் அதில் பதிவாகியுள்ளது.

திமுக மீது “காண்டு” உள்ள ஒரு கோஷ்டி இதனைச் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், திமுக மேலிடம் கண்டு கொள்ளாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.

-இர.போஸ்