×

ஜூலை 27 ஆம் தேதி திமுக அனைத்து கட்சி கூட்டம் : திமுக தலைமை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா உறுதியாகும் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதே போல சென்னையில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு கொரோனா விவரங்களையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார். நேற்று வீடியோ வாயிலாக பேசிய அவர், உயிரிழப்புகளை மறைப்பது எவ்வளவு மோசமான செயல் என்றும் விரைவில் அனைத்து மோசடிகளும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் உயிரிழப்புகளை
 

தமிழகத்தில் கொரோனா உறுதியாகும் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதே போல சென்னையில் எவ்வளவு உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு கொரோனா விவரங்களையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும் மறைப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வந்தார். நேற்று வீடியோ வாயிலாக பேசிய அவர், உயிரிழப்புகளை மறைப்பது எவ்வளவு மோசமான செயல் என்றும் விரைவில் அனைத்து மோசடிகளும் வெளிச்சத்துக்கு வரும் என்றும் உயிரிழப்புகளை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜூலை 27 ஆம் தேதி திமுக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10.30 மணிக்கு காணொளி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் கொரோனா மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.