×

“அமித்ஷாவின் வாரிசு அரசியல் பேச்சு ; உதயநிதி கைது” : பரபரப்புக்கு மத்தியில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது!

சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றுள்ளனர். ஐ. பெரியசாமி, ஆர்.எஸ். பாரதி, எ.வா. வேலு, தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், பொன்முடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கப்படும்
 

சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தொடங்கியது.

அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றுள்ளனர். ஐ. பெரியசாமி, ஆர்.எஸ். பாரதி, எ.வா. வேலு, தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், பொன்முடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.அதேசமயம் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உதயநிதி ஸ்டாலின் கைது, அமித்ஷாவின் வாரிசு அரசியல் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடிய நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது உயர்நிலை செயல் திட்டக் குழு கூடியுள்ளது கவனிக்கத்தக்கது.