×

“தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்” ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!!

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா சாலையின் பெயரை கைவிட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என தமிழக நெடுஞ்சாலை துறை மாற்றி உள்ளது. அத்துடன் இதே பெயரை தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பதிவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல ஆண்டு காலமாக இருந்து வந்த பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை தமிழக
 

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா சாலையின் பெயரை கைவிட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என தமிழக நெடுஞ்சாலை துறை மாற்றி உள்ளது. அத்துடன் இதே பெயரை தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பதிவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல ஆண்டு காலமாக இருந்து வந்த பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயரை தமிழக அரசு மாற்ற என்ன காரணம் என பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?
எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?உடனடியாக மாற்றிடுக! தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்! ” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திராவிட இயக்கத்தின் தலைவர் வீரமணி, “பெரியார் நெடுஞ்சாலை பெயரை கைவிட்டது யாரை திருப்தி செய்ய? ” உடனடியாக புதிய பெயரை நீக்கி பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை என்று மாற்றாவிட்டால் கடும் கிளர்ச்சி வெடிப்பது உறுதி” என்று எச்சரித்துள்ளார். அதேபோல் எம்.பி. தயாநிதி மாறன், “பகுத்தறிவுச் சுடர் தந்தை பெரியாரின் கொள்கைகளைத்தான் பாசிச அதிமுக அரசு மறந்து விட்டது என நினைத்தால், சாலைக்கு சூட்டப்பட்ட தந்தை பெரியார் பெயரையும் மறைப்பது ஏனோ!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.