×

நீட் தற்கொலைகளுக்கு தி.மு.க, காங்கிரஸ்தான் காரணம்! – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வதற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்று தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சட்டப் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “கடந்த ஜூலை 23ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி திரும்பியிருக்க வேண்டும். ஒன்பது மீனவர்கள் திரும்பவில்லை என்ற தகவல் அறிந்ததும் தமிழக அரசு தேடுதல்
 

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வதற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என்று தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “கடந்த ஜூலை 23ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் ஆகஸ்ட் 7ம் தேதி திரும்பியிருக்க வேண்டும். ஒன்பது

மீனவர்கள் திரும்பவில்லை என்ற தகவல் அறிந்ததும் தமிழக அரசு தேடுதல் வேட்டையில் இறங்கியது. அவர்கள் காற்றின் வேகம் காரணமாக எங்காவது கரை ஒதுங்கியிருக்காம் என உறுதியாக தெரிவித்து, அவர்களைத் தேடினோம்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியிருந்தோம். அதன் அடிப்படையில் அவர்கள் நடத்திய ஆய்வில் மியான்மரில் தமிழக மீனவர்கள் கரை ஒதுங்கியது தெரியவந்துள்ளது. தமிழக மீனவர்கள் ஒன்பது பேரும் பத்திரமாக உள்ளனர். அவர் தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மாணவர்களின் நலனே குழிதோண்டி புதைத்து, அழித்தது தி.மு.க, காங்கிரஸ் தான். இவர்கள் ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வை எடுத்து வராதிருந்தால் இவ்வளவு பெரிய பிரச்னை வந்திருக்காது. தமிழக அரசின் ஒரே நிலை நீட் தேவை இல்லை என்பதுதான். கடந்த காலங்களில் எல்லாவற்றிலும் தமிழகம் வெற்றி பெற்றது போல, தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என்பதிலும் தமிழக அரசு வெற்றி பெறும்” என்றார்.


நீட் தற்கொலைக்கு காரணம் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள்தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி அமைச்சரிடம் கேட்ட போது, “நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க – காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததால் உச்ச நீதிமன்றம் வரை சென்று அது உறுதியாகி உள்ளது. நீட்டை கொண்டு வந்ததன் மூலம் மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம்” என்றார்.
நீட் தேவை என்று தமிழக பா.ஜ.க கூறுவது பற்றி கேட்ட போது, “நீட் தேவையில்லை என்பதே அரசின் நிலை. அது அவர்கள் கருத்து. எங்களைப் பொருத்தவரை தேவையில்லை என்று கூறுகிறோம்” என்றார்.