×

நல நடவடிக்கையாக அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை

மத்திய மற்றும் மாநில அரசு நல நடவடிக்கையாக தகுதியான நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போட வேண்டும் என வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். நம் நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதும் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. அதன் பிறகு முதல் கட்டமாக கடந்த மார்ச் 1-ம் தேதி
 

மத்திய மற்றும் மாநில அரசு நல நடவடிக்கையாக தகுதியான நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போட வேண்டும் என வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நம் நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதும் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. அதன் பிறகு முதல் கட்டமாக கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி

2வது கட்டமாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வது கட்டமாக வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு 18 வயதுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துதல்

டி.கே.சிவகுமார் இது தொடர்பாக டிவிட்டரில், தடுப்பூசி கொள்முதலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாறுபட்ட விலை நிர்ணயம் செய்வது பாரபட்சமானது. இது தடுப்பூசி கவரேஜை பாதிக்கும். தேசிய சுகாதார அவசரகாலத்தில் லாபம் ஈட்டுவதை அனுமதிக்கக் கூடாது. நல நடவடிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.