×

அனைவரும் ஒன்றிணைவோம்; இது நிச்சயம் நடக்கும்- திண்டுக்கல் சீனிவாசன்

 

ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 43வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், எம்எல்ஏக்களான ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “பி.கே.மூக்கையாத்தேவர் சிலை திறக்கவும், உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் பணிகளுக்காக நிதி ஒதுக்கி நீரை திறக்க உறுதுணையாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இந்த பகுதியில் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயக்குமார். தேவருக்கு எந்த அளவு மரியாதை வைத்துள்ளோமோ, அதே அளவு பி.கே.மூக்கையாத்தேவருக்கும் மரியாதையுடனும் அன்பு பாசத்தோடு இருப்போம் அவர் புகழ் உயர அதிமுக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என்றார். 

பல பிரிவுகளாக பிரிந்துள்ள அதிமுக அடுத்த ஆண்டில் ஒன்று சேர்ந்து வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நிச்சயமாக நடக்கும் அடுத்த முதலமைச்சரை நாம் தான் ஓட்டுப் போட்டு தேர்தெடுக்க போகிறோம் என பேசினார்.