×

வாயில் மைதாமாவு இல்லாமலேயே அல்வா கிண்டுபவர் மோடி - திண்டுக்கல் லியோனி

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி,  இன்னும் 20  ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆளும் கட்சி திமுக தான் என்று பேசினார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ராஜபாளையம் நகர திமுக சார்பில் ஜவஹர் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவருமான திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார். 

அப்போது பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, “இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். அண்ணா- கலைஞர் இதன் கூட்டு கலவையாய் மு க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சமூக நீதி, பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறார்.  இந்த மக்களுக்கான திட்டங்களை குறை சொல்வதற்காகவே ஒரு கும்பல் அரைவேக்காடு, அரை பைத்தியம், போன்று பேசிவருகிறார்கள். அவர்களை மக்கள் தூக்கி எறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதிமுக, பாஜக இரண்டும் எதிர்க்கட்சிகள் யார் என்பது குறித்து சண்டையிட்டு வருகின்றனர். இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆளும் கட்சி திமுக தான். ஜாதி மத இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களை, தமிழ் மொழியை, அனைத்து மதத்தினரையும் காக்கும் இயக்கம் திமுகதான். மதப் பிரச்சினைகளை பாரதிய ஜனதா கட்சி தூண்டிவிடுகிறது. 

வாயிலே மைதாமாவு இல்லாமலேயே அல்வா கிண்டுபவர் மோடி. கோவில்களில் அனைத்து அறிவிப்புகளும் தமிழில் உள்ள போது அர்ச்சனை மட்டும் ஏன் சமஸ்கிருதத்தில் செய்ய வேண்டும். அதையும் தமிழில் இயற்றி சமூகநீதியை காத்தவர் முதல்வர் முக ஸ்டாலின். ஒன்றிய அமைச்சர்கள் இரண்டு பேர் இஸ்லாமியத்தை பற்றி அவதூறாக பேசியதால் இஸ்லாமிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அந்த இரண்டு பேரையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டு,  இந்திய அரசே மன்னிப்பு கேட்டது ஏன் இந்த அவலம்?

அரபு நாடுகளுக்கு குஜராத்திலிருந்து மாட்டுக்கறி ஏற்றுமதி செய்பவர்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தான் கோமாதா என்று கோஷமிட்டு வருபவர்கள் மாட்டுக்கறியை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருவது எப்படி? பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கோட்டையை நோக்கி பேரணி வந்தார்கள். இங்கே கூடியவர்களை அவர்கள் தான் அவர்களை கண்டித்து அவர்களே பேரணி நடத்தினார் மக்கள் என்ன நினைப்பார்கள். இந்தியாவிலேயே பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் மூன்று வரிக் உழைத்தவர் நமது தமிழக முதல்வர் ஒருவர் மட்டுமே. அரைவேக்காடுகள் கோட்டையை நோக்கி பேரணி நடத்தினார்கள். எங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு சலுகைகளை சீர்திருத்தங்களை செய்து வருவது திமுக அரசு. 

அரசியலில் 55 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது திமுக தான். வீட்டிலும் அரசியலிலும் படிப்பிலும் பதவியிலும் முன்னோடியாக பெண்களுக்கு கொடுத்து சமூகநீதியை சமநீதி ஆக்கியவர் தலைவர் மு க ஸ்டாலின். அதிமுகவில் பெண் முதல்வராக இருந்தும் இந்த சமூக நீதியை உரிமை வழங்கப் படவில்லை.  அதிமுக பாஜக கூட்டணியில் கொள்கை பிடிப்பு எதுவுமில்லை. மட்டுமே கொள்கையை துடிப்புடன் செயல்பட்டு வருகிறது டெல்லியில் செங்கோட்டை அருகே திராவிட கட்டப்பட்டுள்ளது 2024 பிரதமரை தீர்மானிக்கும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே. சமத்துவம், உரிமை பாதுகாக்கும் திராவிட மாடல் கட்சி திமுக தான். ஒடுக்கப்பட்ட மக்களை வாழவைக்கும் கட்சியே இந்த திராவிடர் மாடல் கட்சி. எதையும் உருவாக்குமே ஒழிய, எதையும் அழிக்காது. பிளவுபடுத்தாது. சமூகநீதியை காப்பாற்றும் இயக்கம்தான் திமுகதான்” எனக் கூறினார்.