×

“காரிலிருந்து தேசிய கொடியை கழற்ற சொன்னாரா ஓ.பி.எஸ் “

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களை சமாதானம் செய்தவற்கு மூத்த அமைச்சர்கள் மாறி மாறி இரண்டு வீட்டுக்கும் அலைந்து வருகின்றனர். நேற்று, ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்திய அமைச்சர் எஸ்.பி. உதயகுமார், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.கே.பி.முனிசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஓ.பி.எஸ். உடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்து விட்டுச் சென்றார். எடப்பாடி பழனிசாமியை,
 

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களை சமாதானம் செய்தவற்கு மூத்த அமைச்சர்கள் மாறி மாறி இரண்டு வீட்டுக்கும் அலைந்து வருகின்றனர்.

நேற்று, ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்திய அமைச்சர் எஸ்.பி. உதயகுமார், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
கே.பி.முனிசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே ஓ.பி.எஸ். உடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்து விட்டுச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமியை, அவரது வீட்டில் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இவர்கள் பேசிவிட்டுச் சென்ற பின்னர் முதலமைச்சர் வீட்டுக்கு மின் துறை அமைச்சர் தங்கமணி வருகை தந்தார்.

நேற்று தலைமைச் செயலகத்தில் கொரோனா ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்பட 2 கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே இன்று நடைபெற்ற மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், துணை முதலமைச்சர் பெயர் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இருந்த நிலையில், அரசு சார்பில் வெளியிட்ட அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், மூத்த நிர்வாகிகளிடம் பொங்கியதுடன், தனது காரிலிருந்து தேசியக் கொடியை கழட்டச் சொன்னதாகவும் , துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் சொல்கிறார்கள். இதையொட்டி நேற்று நள்ளிரவு வரை ஓபிஎஸ் vs இபிஎஸ் சமாதான பேச்சு வார்த்தைகளில் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஏற்பட்ட சமாதானங்களுக்கு பிறகே அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓ.பி.எஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை, திடீரென ஏற்கெனவே திட்டமிட்டபடி சிஎம்டிஏ அலுவலகத்தில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார். ஓ.பி.எஸ் நகர்வுதான் என்ன என்பது தெரியாமல், அதிமுக உள்கட்சி வட்டாரங்களும், தமிழக அரசியல் நிலவரமும் பரபரப்பை எட்டியுள்ளது.