×

ஜெயலலிதா மம்மி.. மோடி டாடியா?.. சர்ச்சையில் சிக்கிய தயாநிதி மாறன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளது. நாட்கள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் அனைத்தும் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்களை கவரும் விதமாக புதிது புதிதான அறிவிப்புகளை வெளியிட்டு வாக்கு சேகரித்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலில் வந்த அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள், அவ்வப்போது வரம்பு மீறிப்
 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளது. நாட்கள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் அனைத்தும் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வாக்காளர்களை கவரும் விதமாக புதிது புதிதான அறிவிப்புகளை வெளியிட்டு வாக்கு சேகரித்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலில் வந்த அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள், அவ்வப்போது வரம்பு மீறிப் பேசி சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். பெண்களின் இடுப்பு குறித்து பேசிய திண்டுக்கல் லியோனி பேச்சுக்கும், முதல்வரின் தாயார் குறித்து பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கும் தற்போது வரை கண்டனக் குரல்கள் ஒலிக்கின்றன. இந்த வரிசையில் தற்போது, திமுக தயாநிதி மாறன் சிக்கியிருக்கிறார்.

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக எம்எல்ஏ வை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தயாநிதி மாறன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை மம்மி என்றும் பிரதமர் மோடியை டாடி என்றும் சொல்கிறார். இது என்ன உறவுமுறை? இது போல் திமுகவினர் பேசி இருந்தால் அதிமுகவினர் கடுமையாக பேசி இருப்பார்கள் என்று கூறினார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா இல்லாததால் ‘மோடி தான் இப்போது எங்கள் டாடி’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.