☰
×

2027 உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் களமிறங்கும் தனுஷ் படை!

 

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ், அதைத் தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் தனுஷ் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் 2027 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியான நிர்வாகிகளை அடையாளம் காணும் ஆலோசனைகளும் நடைபெறுவதாக இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக தற்போது 58 மாவட்ட அலகுகளில் 38 வருவாய் மாவட்டங்களில், 100+ மாவட்ட அமைப்புகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுக்கு தனுஷ் அறிவுறுத்தியுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே அக். 14 - கோவையில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை, அக். 25 - சென்னையில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்த நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏசி வசதியுடன் இலவச டியூஷன் சென்டர்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
 ஒவ்வொரு மையத்திலும் 3 ஆசிரியர்கள், 1 உதவியாளர், முதலில் மாவட்டத் தலைநகரங்களில், பின்னர் 234 தொகுதிகளுக்கும் ஜனவரி முதல் பணிகள் தொடங்கத் திட்டம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.