×

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவதூறாக விமர்சித்த புகாரில் திமுக எம்.பி. ஆ. ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆ. ராசா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வகுமார் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அவதூறாக விமர்சித்த புகாரில் திமுக எம்.பி. ஆ. ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆ. ராசா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வகுமார் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 153,505 (1) (b) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக 2ஜி வழக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு விமர்சித்து பேசிய முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திமுக எம்.பி. ஆ . ராசா, 2ஜி வழக்கு குறித்து விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்தார். இதை தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் சவால் விட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது . இன்னும் எடப்பாடிபழனிசாமிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா ?உங்கள் பதவிக்கு இது அழகா? உங்காத்தா கொள்ளை செய்து ஜெயிலுக்கு போனவர். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்தவர். மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி. அப்படிப்பட்ட ஆத்தாவின் படத்தை தூக்கி கொண்டு திரிகிறாயே? அப்படியானால் ஆத்தா மாதிரி ஊழல் செய்வேன் என்று கூறுவதாக அர்த்தமா? என்று ஆவேசமாக பேசி இருந்தது கவனிக்கத்தக்கது.