×

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் முதல் எம்.எல்.ஏ மரணம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அஸ்லம் பாஷா மரணடைந்தார். 2011 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர் அஸ்லம் பாஷா. அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் இளஞ்செழியனை விட 5,000க்கும் அதிகமான வாக்குகளை அதிகம் பெற்று ஆம்பூர் சட்டமன்றத்தின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையை அஸ்லம் பாஷா பெற்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில்
 

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அஸ்லம் பாஷா மரணடைந்தார்.

 

2011 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த முதல் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டவர் அஸ்லம் பாஷா. அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் இளஞ்செழியனை விட 5,000க்கும் அதிகமான வாக்குகளை அதிகம் பெற்று ஆம்பூர் சட்டமன்றத்தின் முதல் எம்.எல்.ஏ என்ற பெருமையை அஸ்லம் பாஷா பெற்றார்.

அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் பாலங்கள், போக்குவரத்து வட்டார அலுவலகக் கட்டம் எனப் பல ஆக்கப்பூர்வமான மக்கள் பனியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்.

அஸ்லம் பாஷாவின் சொந்த ஊர் ஆம்பூர் அருகே உள்ள புதூர். எளிய குடும்பத்தில் பிறந்து தம் கடும் உழைப்பால் பெரும் பொறுப்புகளை அடைந்தார். அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு தற்போது வயது 52. அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அஸ்லம் பாஷாவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.