×

2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டி: ரவி

சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் எச்.ராஜா, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், பேராசிரியர் சீனிவாசன், கேடி.ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் உட்கட்டமைப்பு, வளர்ச்சிபணிகள், 2021சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, “பாஜக குறித்த வரவேற்பை பொதுமக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. திமுக போன்ற
 

சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் எச்.ராஜா, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், பேராசிரியர் சீனிவாசன், கேடி.ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் உட்கட்டமைப்பு, வளர்ச்சிபணிகள், 2021சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, “பாஜக குறித்த வரவேற்பை பொதுமக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. திமுக போன்ற கட்சிகள் இட ஒதுக்கீட்டு எதிரான கட்சியாக எங்களை சித்தரிக்கின்றன. ஆனால் அது தவறு தமிழ் மொழிக்கு எதிரான கட்சி பா.ஜ.க என சில கட்சிகள் சொல்கிறார்கள், அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு பொய் பரப்புரை எதிர்நோக்கி பாஜக பயணித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட முடியும்” எனக்கூறினார்.