×

கேரளாவில் இடதுசாரிகள் வெற்றி.. மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒரு எச்சரிக்கை.. மார்க்சிஸ்ட்

கேரளாவில் இடதுசாரிகளின் வெற்றி மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கடந்த 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 97 தொகுதிகளில் வெற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இடது ஜனநாயக முன்னணி வெற்றி
 

கேரளாவில் இடதுசாரிகளின் வெற்றி மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கடந்த 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 97 தொகுதிகளில் வெற்றி ஆட்சியை தக்கவைத்து கொண்டது. இடது ஜனநாயக முன்னணி வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் மாநில செயலாளர் விஜயராகவன் கூறியதாவது: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இடது ஜனநாயக முன்னணி

பா.ஜ.க.வை எதிர்க்க தேசிய அளவில் மாற்று அரசியல் அமைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. பினராயி விஜயன் அரசாங்கத்தின் செயல்திறனை மக்கள் ஏற்றுக்கொண்டதை இப்போது தேர்தல் வெற்றியின் மூலம் தெளிவாகியுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தனது விசாரணை அமைப்புகளை தவறான அமைப்புகளை பயன்படுத்தி மாநில அரசை அழிக்க முயற்சி செய்தது. மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த நடவடிக்கை ஆதரித்தது. ஆயினும் கூட மாநில மக்கள் இடது அரசாங்கத்துக்கு ஐகானிக் வெற்றியை கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ்

விஜயன் அரசாங்கம் மாநிலத்தின் விரிவான வளர்ச்சிக்கு ஒரு வரைபடத்தை தயாரித்து அதை செயல்படுத்த முற்பட்டது. அதை மக்கள் நம்புகின்றனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இடது ஜனநாயக முன்னணி வெற்றி மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தவறி விட்டது. மேலும் பாரம்பரியமான கட்சியான காங்கிரசின் சரிவு இப்போது வேகப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் பலவீனமாக மாறும்போது, இடது ஜனநாயக முன்னணி முன்னேறி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.