×

#BREAKING திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா !

திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழக தேர்தல் களம் தற்போது அனல் பறக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை பிடிக்க தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவர் அதிமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுக
 

திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழக தேர்தல் களம் தற்போது அனல் பறக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை பிடிக்க தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார். அவர் அதிமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியை ஆட்சியை விமர்சித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அதேபோல் திமுகவில் தலைவர் ஸ்டாலின் மட்டுமில்லாது எம்.பி. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவந்த நிலையில் கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் தொகுதி மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பரப்புரையில் தேக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.