×

"திமுக கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது"- காங்கிரஸ் எச்சரிக்கை

 

சட்டப்பேரவை தேர்தல் குறித்து சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் அகில இந்திய காங்கிரஸ்  பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட காங். கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செல்வப்பெருந்தகை, காங். தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “நாடாளுமன்ற தேர்தல் போல் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. திமுக கூட்டணி தொடர்பாக 2ஆம் கட்ட காங். தலைவர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி குறித்து பொதுவெளியில் கூறப்படும் கருத்துகள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுக எங்கள் பழைய கூட்டாளி. அவர்களிடம் எங்கள் நிலைப்பாட்டை எடுத்து வைத்து பேசி முடிவு செய்வோம். ஆட்சி அதிகாரம் குறித்து ஊடகங்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், முடிவெடுத்தால் நாங்களே தெரிவிப்போம். வகுப்புவாத சக்திகளை எதிர்க்க திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படும்” என்றார்.