×

கடத்தல் ராணி ஸ்வப்னாவால் ஆட்டம் காணும் கேரள அரசு… நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் காங்கிரஸ்

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் தற்போது பெரிதாக வெடித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராகவும், அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது: முதல்வர் தனது முன்னாள் தலைமை செயலரை பாதுகாக்கிறார், இது தங்க கடத்தில் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளதை வெளிப்படுத்துகிறது. நாங்கள் அரசு மற்றும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா
 

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் தற்போது பெரிதாக வெடித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராகவும், அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது:

முதல்வர் தனது முன்னாள் தலைமை செயலரை பாதுகாக்கிறார், இது தங்க கடத்தில் வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளதை வெளிப்படுத்துகிறது. நாங்கள் அரசு மற்றும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளோம். தங்க கடத்தில் வழக்கில் சபாநாயகரும் சம்பந்தப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்