டீல் பேசும் திமுக? தவெகவை கழட்டி விட தயாராகும் காங்கிரஸ்! அதிர்ச்சியில் விஜய்
திமுகவிடம் பேரம் பேச, காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சென்னை வந்துள்ளார்.
நாங்கள் த.வெ.க.விற்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் வாங்கத் தயார். நீங்கள் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டால், இப்போதே, இன்றே செய்கிறோம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசவிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) விவகாரம் தான் இப்போது இந்திய அரசியலின் மையப்புள்ளி.
தொகுதி மறுவரையறை நடந்தால் தென் மாநிலங்களுக்கு எம்.பி. தொகுதிகள் குறையும், வட மாநிலங்களுக்கு கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதை எதிர்க்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. அதேநேரத்தில் த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை பலவீனப்படுத்தக் கூடாது என திமுக டீல் பேசி வருக்கிறது. இரண்டு தரப்பும் தங்கள் நலனுக்காக ஒரு புரிந்துணர்வுக்கு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதும் முதல்வர் விஜய் தரப்பிற்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் போனால், தமிழ்நாட்டில் த.வெ.க.வின் தலையெழுத்தே மாறும். ஆனால் இது குறித்து காங்கிரஸ், திமுக தரப்பில் இருந்து இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.