×

தடுப்பூசி பாதுகாப்பானது என்றால் ஆட்சியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட முன்வராது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றால் ஆட்சியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட முன்வராது ஏன் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனிஷ் திவாரி தடுப்பூசி தொடர்பாக கூறியதாவது: தடுப்பூசி பாதுகாப்பானது, நம்பகமானது மற்றும் தடுப்பூசி செயல்திறன் கேள்விக்கு அப்பாற்றப்பட்டது என்றால், உலகெங்கிலும் மற்ற நாடுகளில் ஆட்சியாளர்கள் முதலில் தடுப்பூசி போட்டு கொண்டது போல் நமது ஆட்சியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராது
 

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றால் ஆட்சியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட முன்வராது ஏன் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனிஷ் திவாரி தடுப்பூசி தொடர்பாக கூறியதாவது: தடுப்பூசி பாதுகாப்பானது, நம்பகமானது மற்றும் தடுப்பூசி செயல்திறன் கேள்விக்கு அப்பாற்றப்பட்டது என்றால், உலகெங்கிலும் மற்ற நாடுகளில் ஆட்சியாளர்கள் முதலில் தடுப்பூசி போட்டு கொண்டது போல் நமது ஆட்சியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராது எப்படி?.

மனிஷ் திவாரி

கோவாக்சின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து மருத்துவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். எந்த தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்பதை மக்கள் தேர்வு செய்ய முடியாது என்று அரசு தெரிவித்துள்ளது. இது தகவலறிந்த சம்மதத்தின் முழு கோட்பாடுக்கும் எதிராக செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுதல்

நாடு முழுவதுமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். நேற்று மொத்தம் 3,006 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் வீதம் மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.