×

சீனாவை வெளியேற்ற முடியவில்லை.. ஆனால் எதிர்க்கட்சியினரை வெளியேற்ற பலத்தை பயன்படுத்திய பா.ஜ.க…. அகமது படேல்

சீனாவை வெளியேற்ற முடியவில்லை ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெளியேற்ற பா.ஜ.க. அரசு பலத்தை பயன்படுத்தியது என காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் குற்றம் சாட்டினார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான அகமது படேல் டிவிட்டரில், வலுவான பா.ஜ.க. அரசால் சீனாவை வெளியேற்ற முடியவில்லை, கொரோனா வைரஸை வெளியேற்ற முடியவில்லை, பொருளாதாரம் எதிர்க்கொள்ளும் நெருக்கடியை வெளியேற்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை வெளியேற்ற தங்களது பலத்தை பயன்படுத்துகின்றனர். அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணம்? விவசாயிகளின்
 

சீனாவை வெளியேற்ற முடியவில்லை ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெளியேற்ற பா.ஜ.க. அரசு பலத்தை பயன்படுத்தியது என காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் குற்றம் சாட்டினார்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான அகமது படேல் டிவிட்டரில், வலுவான பா.ஜ.க. அரசால் சீனாவை வெளியேற்ற முடியவில்லை, கொரோனா வைரஸை வெளியேற்ற முடியவில்லை, பொருளாதாரம் எதிர்க்கொள்ளும் நெருக்கடியை வெளியேற்ற முடியவில்லை. ஆனால் அவர்கள் எதிர்கட்சி எம்.பி.க்கள் 8 பேரை வெளியேற்ற தங்களது பலத்தை பயன்படுத்துகின்றனர்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

அவர்கள் வெளியேற்றப்பட்டதற்கு காரணம்? விவசாயிகளின் உரிமைகளுக்காக நின்றதுதான் என பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை, நாடாளுமன்ற அமைப்பின் நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தார்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இது குறித்து கூறுகையில், மத்திய அரசு நாடாளுமன்றத்திலும், வெளியேயும் கருத்து வேறுபாடுகளை எழுப்புகிறது என குற்றம் சாட்டினார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாநிலங்களவையில் விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஒரு வாரம் காலம் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்தார்.