×

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைப்பு.. எதிர்க்கும் காங்கிரஸ் தலைமை.. ஆதரிக்கும் சசி தரூர்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, 2019 பிப்ரவரியில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய விமான நிலையங்களின் நிர்வாகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமையை அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் நடவடிக்கையை தொடங்க அதானி நிறுவனத்துக்கு வரும் நவம்பர் 12ம் தேதி வரை மத்திய
 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, 2019 பிப்ரவரியில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய விமான நிலையங்களின் நிர்வாகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் உரிமையை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் நடவடிக்கையை தொடங்க அதானி நிறுவனத்துக்கு வரும் நவம்பர் 12ம் தேதி வரை மத்திய அரசு காலஅவகாசம் வழங்கியுள்ளது. மேலும் திருவனந்தபுரம் விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு வழங்க கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான திருவனந்தபுரம் விமானநிலைய நிர்வாகத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சசி தரூர் இது தொடர்பாக டிவிட்டரில், எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்தற்கு முன் என் சகாக்கள் என்னிடம் ஆலோசனை செய்து இருக்க வேண்டும். என்னுடைய கருத்துக்களை அவர்களிடம் விளக்கி இருப்பேன். நான் எனது தொகுதியின் நலன்களுக்காக பேசுகிறேன். நான் வாக்காளர்களிடம் ஒரு விஷயத்தையும், பின்னர் அரசியல் வசதிக்காக வேறு ஒன்றையும் சொல்லும் அரசியல்வாதி அல்ல. இந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என வீடியோவையும் அதில் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக விமான நிலையத்துக்காக பி.பி.பி. மாடல் அவசியத்தை அதில் விளக்கி இருந்தார்.