×

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று நல்லடக்கம்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய மாதவராவ் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய்த மாதவராவ் ஆரம்பத்தில் இருந்தே உடல்நலக்குறைவால் பரப்புரை மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார். இதனால் அவர் மகள் திவ்யா தந்தைக்காக பரப்புரை செய்து வந்தார். இதை தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மாதவராவ் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாச கருவி மூலம் மாதவராவ்
 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய மாதவராவ் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய்த மாதவராவ் ஆரம்பத்தில் இருந்தே உடல்நலக்குறைவால் பரப்புரை மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார். இதனால் அவர் மகள் திவ்யா தந்தைக்காக பரப்புரை செய்து வந்தார்.

இதை தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மாதவராவ் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். செயற்கை சுவாச கருவி மூலம் மாதவராவ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாதவராவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லத்தில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.வேட்பாளர் மாதவராவ் மறைவையொட்டி , ஸ்ரீவில்லிபுத்தூரில் மே 2ம் தேதி அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் அங்கு காங்கிரசே மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.