49 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிங் மேக்கரான கம்யூனிஸ்ட்! அன்று எம்ஜிஆர், இன்று விஜய்!!
இடதுசாரிகள் தானே... ஓரிரு தொகுதிகள் கொடுத்து வாயடைத்துவிடலாம் என்ற நிலைமாறி, ஆட்சியையே கட்டமைக்கும் மிக பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சிகள். இது தற்போது புதிதல்ல... வரலாறு திரும்பியிருக்கிறது என்பதே உண்மை.
தமிழக அரசியல் வரலாற்றில் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காரணம் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், தனது முதல் தேர்தலிலேயே எம்ஜிஆரை தோற்கடித்து, கூட்டணிகளின் பலத்தோடு முதல்வரானார்.49 ஆண்டுகள் பிறகு 2026-ல் அமோக வெற்றி பெற்று, மீண்டும் நடிகர் விஜய் என்ற ஒரு நடிகர் அதே பாணியில் தமிழக முதல்வர் ஆனது, உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்ஜிஆர் உடன் கூட்டணி சேர்ந்து அவர் ஆட்சி அமைக்க காரணமாய் இருந்த கம்யூனிஸ்ட் மீண்டும் 2026 ஆம் ஆண்டு விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. 1977 ல் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கைகோத்துக் களமிறங்கிய எம்ஜிஆர், தனிப்பெரும்பான்மை பெற்று முதல்வர் ஆனார். ஆனால் தற்போது விஜய் தனியாக களமிறங்கி, அதிக இடங்களை பெற்று, பெரும்பான்மைக்காக கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவை நாடியுள்ளார். வாக்கு விகிதத்தில் எம்ஜிஆரையும் மிஞ்சிவிட்டார் விஜய். 1977ல் எம்ஜிஆர் தனது முதல் தேர்தலில் பெற்ற வாக்கு விகிதம் 33.5%. விஜய்க்கு சுமார் 35% வாக்குகள் கிடைத்துள்ளன.