×

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் சர்ச்சை… பாஜகவை கிழித்து தொங்கவிட்ட முத்தரசன்!

புதுச்சேரியில் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசும் மலிவான வியாபாரத்தில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்த முடிந்த தேர்தலில் அருதிப் பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் தேர்வு செய்யப்படவில்லை. முதல்வராக பதவியேற்று இருக்கும் ரங்கசாமி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக அரசு, புதுச்சேரியில் குறுக்கு வழியில் அமைச்சர்களை நியமனம் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மூன்று உறுப்பினர்களை நியமனம் செய்ய
 

புதுச்சேரியில் சுயேச்சை உறுப்பினர்களை விலைபேசும் மலிவான வியாபாரத்தில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்த முடிந்த தேர்தலில் அருதிப் பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் தேர்வு செய்யப்படவில்லை. முதல்வராக பதவியேற்று இருக்கும் ரங்கசாமி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக அரசு, புதுச்சேரியில் குறுக்கு வழியில் அமைச்சர்களை நியமனம் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மூன்று உறுப்பினர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை இருந்து வந்த ஜனநாயக நடைமுறையை மத்திய பாஜக அரசு நிராகரித்து உறுப்பினர்களை நியமித்துள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களையும் பாஜக மதிக்கவில்லை. மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் அரசியல் சூதாட்டம் களுக்கு ஆளுநர் அதிகாரம் பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது என கண்டனம் தெரிவித்துள்ள முத்தரசன், பாஜகவின் வஞ்சகத்தை முறியடிக்கத் ஜனநாயக, மதசார்பற்ற கட்சிகள் அணிதிரண்டு போராட முன்வரவேண்டும் என்றும் புதுச்சேரி மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜகவுடனான மோதலுக்கு பிறகு, முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி பதவியேற்றார். அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதால் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்னும் பதவியேற்கவில்லை. இத்தகைய சூழலில், புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களே இன்னும் பதவியேற்காத சூழலில், நேரடியாக 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.