×

“அவங்க ரெண்டு பேரும் கோமாளி பாய்ஸ்” : திமுக எம்.பி. சாடல்!!

அமைச்சர் வேலுமணி ஊழல் பணத்தை செலவு செய்து வருகிறார் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக சார்பாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “முதல்வராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் தமிழகம் ஊழல் தான் முன்னேறி வருகிறது. அமைச்சர்களில் முதலமைச்சருக்கு பிறகு அதிக
 

அமைச்சர் வேலுமணி ஊழல் பணத்தை செலவு செய்து வருகிறார் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக சார்பாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “முதல்வராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் தமிழகம் ஊழல் தான் முன்னேறி வருகிறது. அமைச்சர்களில் முதலமைச்சருக்கு பிறகு அதிக ஊழல் செய்தவர் வேலுமணி.

அனைத்து துறைகளிலும் அவர்கள் ஊழல் செய்துள்ளனர். மின்சாரத் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது .அதை வைத்து அவர்கள் ஊழல் செய்து வருகிறார்கள் .ஜெயலலிதா பிறந்தநாள் அன்று 73 ஜோடிகளுக்கு தனது சொந்தப் பணத்தில் திருமணம் செய்து வைத்ததாக அமைச்சர் வேலுமணி கூறினார். அந்த தொகுதி முழுவதும் கோடீஸ்வரர்கள் பத்திரிக்கை வைத்ததுபோல தட்டு, சேலை, வேட்டிகள் வைத்து தொகுதி முழுவதும் பத்திரிக்கை வைத்துள்ளார். இதற்கு அவர் வரி கட்டவில்லை. காரணம் அவர் கருப்பு பணத்தில் தான் இந்த திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல ஊழல் பணத்தில்தான் இந்த அரசு நடந்து வருகிறது. மு .க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுக வேட்பாளர் சிவசேனாபதி வந்துள்ளார் .ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியது நாங்கள் கிடையாது ஓபிஎஸ் தான்; ஆனால் அவர் துணை முதல்வர் பதவி கிடைத்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து வாய் திறக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள். அந்த பொறாமையில் தான் புதிய கல்விக் கொள்கை ,எதைப் படித்தாலும் நுழைவுத்தேர்வு என மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கொரோனாவை பொறுத்தவரை மத்திய அரசின் மோடியும், தமிழகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும் கோமாளிகள் போல செயல்பட்டு வருகிறார்கள் ” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.