☰
×

“சீமானை கைது செய்து பெரிய ஆளாக்க வேண்டாம்”- முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

 

 

முதல்வர் விஜய் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது சட்டம் - ஒழுங்கு முதல் ஊழல் வழக்குகள் வரை கேட்டறிந்தார். 

குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேலு மீது உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் எந்த நிலையில் இருக்கிறது, ஆவணங்கள் என்ன?, சாட்சியங்கள் என்ன?, அடுத்த நடவடிக்கை என்ன? என எல்லாவற்றையும் கேட்டறிந்தார் விஜய். “ஊழல் வழக்குகளில் சுணக்கம் கூடாது, காலதாமதம் கூடாது! தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு முதல்வர் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் விதிமீறல் புகார்களில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை குறித்தும் பேசப்பட்டது.

“தவெக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கலாமா?” என உள்துறை அதிகாரிகளின் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது சீமான் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சுகள், பொது அமைதிக்கு பாதிப்பு என்ற புகார்கள் உள்ளது. “அவசரப்பட்டு கைது வேண்டாம்!”  கைது செய்ய வைக்க வேண்டும் என்றுதான் அவர் சீமான் பேசுகிறார். “சீமானை கைது செய்து அவருக்கு அரசியல் விளம்பரம் கொடுத்து பெரிய ஆளாக்க வேண்டாம்” என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்  தொடர்ந்து அவரின் செயல்பாடுகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தாரல் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும் அதிகாரிகளுக்கு விஜய் ஸ்மார்ட்டாக அறிவுரை வழங்கியுள்ளார்.