×

உதயநிதி ஸ்டாலின் vs சபரீசன்! திமுகவில் வெடித்த அதிகாரப் போர்… பரபரப்பு பின்னணி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும், மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் சண்டை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். 2016 தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘நமக்கு நாமே’ நடைப்பயணம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் சபரீசனும் பங்கு உண்டு. வெளியுலகிற்கு முகத்தை காட்டவில்லை என்றாலும், கட்சிக்குள் பல வியூகங்களை வகுத்து கொடுத்தவர் சபரீசன். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன் தான் தயாரித்துக் கொடுத்துள்ளார். டெல்லியில் கூட்டணி கட்சி
 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும், மகன் உதயநிதி ஸ்டாலினுக்கும் சண்டை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். 2016 தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘நமக்கு நாமே’ நடைப்பயணம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் சபரீசனும் பங்கு உண்டு. வெளியுலகிற்கு முகத்தை காட்டவில்லை என்றாலும், கட்சிக்குள் பல வியூகங்களை வகுத்து கொடுத்தவர் சபரீசன். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சபரீசன் தான் தயாரித்துக் கொடுத்துள்ளார். டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும்போதும் ஸ்டாலின் சபரீசனை உடன் அழைத்து செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இடையே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொள்ளாச்சி பாலியல் குற்றச்செயல்களில் சபரீசனுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே சமயம் சபரீசனுக்கு திமுகவில் எம்.பி. பதவியை ஸ்டாலின் வழங்குவார் என்ற பாசிட்டிவ் தகவல்களும் உலா வந்தன.

தொழில்நுட்ப யுக்திகளில் அவ்வளவாக அனுபவமில்லாத ஸ்டாலினுக்கு பல யுத்திக்களை சொல்லிக்கொடுக்கும் சபரீசன், திமுகவிற்கு ஐடி விங் உருவாக்கியது, அதனை நிர்வகித்து வந்தது என ஏராளமான வேலைகளை செய்துவந்துள்ளார். அதனைவிட மிக முக்கியமான விஷயம், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஆலோசனை வழங்க அழைக்குமாறு யோசனை கூறியதும் சபரீசனின் வேலை தானாம். ஆனால் ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரிய விரட்டிய கதையா? சபரீசன் மூலமாக திமுகவுடன் கைக்கோர்த்த பிரசாந்த் கிஷோர் சபரீசனை ஓரங்கட்டிவிட்டு உதயநிதி ஸ்டாலினை கட்சியின் அதிகாரப்பதவியில் ஏற்றியுள்ளார். அந்த பதவிதான் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த இளைஞரணி செயலாளர். இதனால் சினிமாவை ஓரங்கட்டிவிட்டு முழு அரசியலுக்குள் நுழைந்தார் உதயநிதி. யார் மாவட்ட பொறுப்பாளர், யார் செயலாளர் என அனைத்து முடிவுகளையும் எடுக்கத்தொடங்கியுள்ளார்.

பிரதிபலனையே எதிர்பார்க்காமல் மாமனாருக்காக ஓடி ஓடி உளைத்த சபரீசன் பி.கே. வின் செயலால் கடும் ஏமாற்றமடைந்தார். அதுமட்டுமின்றி கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினை மூன்றாம் கலைஞர், அடுத்த சென்னை மேயர் என அழைப்பது சபரீசனுக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. தன்னால் வரவழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், தனக்கு எதிராக செயல்படுவதால், சபரீசனுக்கு விசுவாசமாய் செயல்படும் ’ஐபேக்’ ஐடி ஊழியர்களை வைத்து ஐடி விங்கில் சில மோதல் வேலைகளை செய்து வருகிறார் சபரீசன்.

இந்த செய்தி உதயநிதி ஸ்டாலினின் காதுக்கு வர, தனது தந்தைக்கு தெரியாமல் மறைமுகமாக சபரீசனை கட்சியிலிருந்து முற்றிலுமாக எவ்வாறு ஓரங்கட்டுவது என திட்டம் தீட்டிவருகிறாராம் உதயநிதி. சபரீசனை பழிவாங்குவதற்காக திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியோடு, தனியாக ஒரு ஐடி டீமை உருவாக்கி யுத்தத்தை தொடங்கியுள்ளார் உதயநிதி. இதற்கு முன் உள்ளாட்சி தேர்தலில் கொங்க் மண்டலத்தில் ஏற்பட்ட வாக்கு வீழ்ச்சியின்போது உதயநிதி- சபரீசன் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டை வீட்டுக்குள் மட்டுமில்லாமல் கட்சிக்குள்ளும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின் நடவடிக்கை பிடிக்காததால் பல மூத்த நிர்வாகிகள் திமுகவிலிருந்து விலகி செல்லும் நிலையில், தற்போது அவரது மகன், அதிகார மோதலில் ஈடுபடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே இவ்வளவு கருத்துமோதல் இருந்தால் வெளியில் எவ்வித பிரதிபலனும் எதிர் பாராமல் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் சாதாரண நிர்வாகிகளை ஓரங்கட்ட எவ்வளவு நேரம் ஆகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.