×

கர்நாடகாவில் பா.ஜ.க., காங்கிரஸை எதிர்த்து போட்டி.. ஜெயிச்சு ஆட்சியை பிடிக்கிறோம்.. தேவ கவுடா நம்பிக்கை

கர்நாடகாவில் 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸை எதிர்த்து மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் என்று தேவ கவுடா தெரிவித்தார். கர்நாடகாவில் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சி பா.ஜ.கவுடன் இணைய உள்ளதாக கடந்த சில தினங்களாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது. இந்த செய்தியை முன்னாள் பிரதமரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் நிறுவனருமான தேவ கவுடா மறுத்துள்ளார். பெங்களூவில் தேவ கவுடா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: காங்கிரஸ் கட்சி
 

கர்நாடகாவில் 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸை எதிர்த்து மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் போட்டியிடும் என்று தேவ கவுடா தெரிவித்தார்.

கர்நாடகாவில் மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சி பா.ஜ.கவுடன் இணைய உள்ளதாக கடந்த சில தினங்களாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது. இந்த செய்தியை முன்னாள் பிரதமரும், மதச்சார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் நிறுவனருமான தேவ கவுடா மறுத்துள்ளார். பெங்களூவில் தேவ கவுடா செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:

தேவ கவுடா

காங்கிரஸ் கட்சி சித்தராமையா தலைமையில் இந்த (மதச்சார்ப்பற்ற ஜனத தளம்) கட்சியை அழிக்க விரும்பியது. இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது. அது சொந்த தளத்தை பெற்றுள்ளது. மாநிலத்தில் மத்சார்ப்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சிக்கு காங்கிரஸ்தான் காரணம்.

மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்

கர்நாடாகவில் 2023ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். இந்த (மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்) கட்சியை பாதுகாப்போம் மற்றும் உருவாக்குவோம். நாட்டுக்கு ஒரு மாநில கட்சி அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.