×

தடையை மீறி கிராம சபைக்கூட்டம்: மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

கொரட்டூரில் அரசின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய முக ஸ்டாலின் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை நடைபெறும் என அறிவித்த அரசு, கொரோனா சூழலில் கூட்டத்தை நடத்த வேண்டாம் என தனது முடிவில் பின்வாங்கியது. மேலும், தமிழகத்தின் எந்த இடத்திலும் கிராம சபை நடத்தக்கூடாது என
 

கொரட்டூரில் அரசின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய முக ஸ்டாலின் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை நடைபெறும் என அறிவித்த அரசு, கொரோனா சூழலில் கூட்டத்தை நடத்த வேண்டாம் என தனது முடிவில் பின்வாங்கியது. மேலும், தமிழகத்தின் எந்த இடத்திலும் கிராம சபை நடத்தக்கூடாது என அறிவித்தது.

இதன் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாக விமர்சிக்க தொடங்கிய எதிர்க்கட்சிகள், அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரவாத கொரோனா இப்போது மட்டும் பரவிடுமா? என விமர்சிக்க, அதற்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர். இதனிடையே அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூரில் திமுக தலைவர் ஸ்டாலின், கிராம சபை கூட்டத்தை கூட்டி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில், தடையை மீறி கூட்டம் நடத்தியதாக மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் என பலர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.