×

விவேக் மரணம் குறித்து மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு… சென்னை கமிஷனருக்கு பறந்த புகார்!

நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்தார். அதற்கு இரு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனால் அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இருப்பதாக வாட்ஸ்அப் விஞ்ஞானிகளும் கதை கட்டி வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இது மறுக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் விவேக் இறக்கவில்லை. இரண்டையும் தொடர்புபடுத்துவது தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இச்சூழலில் நேற்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய
 

நகைச்சுவை நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை மரணமடைந்தார். அதற்கு இரு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனால் அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இருப்பதாக வாட்ஸ்அப் விஞ்ஞானிகளும் கதை கட்டி வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இது மறுக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் விவேக் இறக்கவில்லை. இரண்டையும் தொடர்புபடுத்துவது தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

இச்சூழலில் நேற்று விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலி கான், விவேக்கிற்கு யாரைக் கேட்டு தடுப்பூசி போட்டீர்கள் என்றும், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் சர்ச்சையாகப் பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியிலும் அந்த வதந்தி எளிதாகப் பரவிவிட்டது. விவேக்கின் மரணம் குறித்து நமக்கு இருக்கும் சந்தேகங்களை எழுப்பலாம். அதற்கு அரசு விளக்கம் கொடுக்க தார்மீக பொறுப்பு இருக்கிறது. ஆனால் தடுப்பூசியால் தான் அவர் இறந்தார் என்று கூறுவது சரியாகாது.

இச்சூழலில் பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மன்சூர் அலி கான் மீது ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறைச் செயலர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறோம்” என்றார்.