×

நத்தம் விஸ்வநாதனின் வெற்றியை எதிர்த்து வழக்கு; பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சி அமைத்தது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நத்தம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்
 

அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சி அமைத்தது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நத்தம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் திமுக வேட்பாளரை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். அவர் வேட்பு மனுவில் பல்வேறு தகவல்களை மறைத்ததாகவும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் ஆண்டி அம்பலம் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக பணத்தை அவர் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சேஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தின் வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தார்.