×

‘கடவுள் புகைப்படத்துடன் பரப்புரை’ கமல் மீது வழக்குப்பதிவு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக என ஐந்துமுனை போட்டி நடக்கிறது. இதனால் தமிழக அரசியல் அனல் பறக்கும் பிரச்சாரத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கமல் ஹாசன் இந்த முறை
 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக என ஐந்துமுனை போட்டி நடக்கிறது. இதனால் தமிழக அரசியல் அனல் பறக்கும் பிரச்சாரத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கமல் ஹாசன் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கோவையில் முகாமிட்டுள்ள அவர் அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டம் காட்டூர் காவல் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் பழனிகுமார் அளித்த புகாரின் பேரில் கமல் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடவுள் படங்களை வைத்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பரப்புரை செய்ததால் அக்கட்சியின் தலைவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.தேர்தல் பரப்புரை தொடங்கியது முதல் அவதூறு பேச்சு, தேர்தல் விதிமீறல் என இதுவரை ஆ.ராசா, தயாநிதி மாறன், அண்ணாமலை, திண்டுக்கல் ஐ லியோனி என பலர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.